ஒரு காதல் தேவதை பூமியில் வந்தாள்..



ஒரு காதல் தேவதை பூமியில் வந்தாள்
ஒரு காதல் காவியம் கையேடுதந்தாள்..
கள்ளூரும் காலை வேளையில்...(2)

பூக்களின் கருவரையில் பிறந்தவள் நீயா........
பூவுக்குள் பூஜை செய்ய பிறந்தவன் நானில்லயா...
இதயத்தின் தாமரையில் இருப்பவன் நீயா?
தாமரைக்குள் வீடுகட்டி தந்தவள் நானில்லயா ?
ஓடோடி வந்ததால் உள்மூச்சு வாங்குது
உன் மூச்சில் அல்லவா என்முச்சும் உள்ளது...
ஒன்றானது.......

ஒரு காதல் தேவதை பூமியில் வந்தாள்
ஒரு காதல் காவியம் கையேடுதந்தாள்..
கள்ளூரும் காலைவேளையில்
ஒரு காதல் தேவதை பூமியில் வந்தள்

யாருக்கு யார் உறவு யாரரிவாரோ......
என் பெயரில் உன் பெயரை இயற்கையும் எழுதியதோ..
பொன் மகள் மூச்சுவிட்டால் பூமலராதோ....
பூமகளின் வாய்மொழியே பூஜைக்கு வேதங்களோ...
கல்லுரி வாழ்கையில் காதல் ஏன் வந்தது....
ஆகாயம் எங்கிலும் நீலம் யார் தந்தது
இயல்பானது.......

ஒரு காதல் தேவதை பூமியில் வந்தாள்
ஒரு காதல் காவியம் கையேடுதந்தாள்..
கள்ளூரும் காலை வேளையில்...

மழை வரும் அறிகுறி, என் விழிகளில் தெரியுதே



மழை வரும் அறிகுறி, என் விழிகளில் தெரியுதே
மனம் இன்று நனையுதே, இது என்ன காதலா ? சாதலா?
பழைகிய காலங்கள், என் பார்வையில் விரியுதே
பாதைகள் நழுவுதே , இது ஏனோ ஏனோ ?

உன் தோளில் சாயும்போது , உற்சாகம் கொள்ளும் கண்கள்
நீ எங்கே எங்கே என்று உன்னை தேடி தேடி பார்க்கிறது
உன்னோடு போகும் போது பூ பூக்கும் சாலையாவும்
நீ எங்கே என்று என்னை கேட்ட பின்பு வாடிடிடுதே

அறியாதொரு வயதில் விதைத்தது …ஒஹோஒ ஒஹோ ஒஹோஒ ஒஹோ
அதுவாகவே தானாய் வளர்ந்தது … ஒஹோஒ ஒஹோ
புதியதாய் ஒரு பூவும் போகையில் ..ஒஹோஒ ஒஹோ ஒஹோ ஒஹோஒ ஒஹோ
அட யாரதை யாரதை பறித்ததோ? ஒஹோஒ ஒஹோ .

உன் கால் தடம் சென்ற வழி பார்த்து நானும் வந்தேனே
அது பாதியில் தொலைன்தடா

நான் கேட்டது அழகிய நேரங்கள் ஒஹோஒ ஒஹோ ஒஹோ ஒஹோஒ ஒஹோ
யார் தந்தது விழிகளில் ஈரங்கள் ஒஹோஒ ஒஹோ
நான் கேட்டது வானவில் மாயங்கள் ஒஹோஒ ஒஹோ ஒஹோ ஒஹோஒ ஒஹோ
யார் தந்தது வழிகளில் காயங்கள் ஒஹோஒ ஒஹோ

இந்த காதலும் ஒரு வகை சித்திரவதைதான்
அது உயிருடன் எரிகுதுடா!
மழை வரும் அறிகுறி, என் விழிகளில் தெரியுதே
மனம் இன்று நனையுதே, இது என்ன காதலா ? சாதலா?
பழைகிய காலங்கள், என் பார்வையில் விரியுதே
பாதைகள் நலுவுதே , இது ஏனோ ஏனோ ?

உன் தோளில் சாயும்போது , உற்சாகம் கொள்ளும் கண்கள்
நீ எங்கே எங்கே என்று உன்னை தேடி தேடி பார்க்கிறது
உன்னோடு போகும் போது பூ பூக்கும் சாலையாவும்
நீ எங்கே என்று என்னை கேட்ட பின்பு வாடிடிடுதே

ஆத்தாடி ஆத்தாடி - அய்யனார்

படம் : அய்யனார்

பாடல் : ஆத்தாடி ஆத்தாடி

இசை : தமன்.எஸ்

பாடலாசிரியர்: நா.முத்துகுமார்

பாடியவர்கள் : நவீன்

++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

மயங்குறேன்டி மயங்குறேன்டி மனசுக்குள்ள வட்டமிட்டு மயங்குறேன்டி

நொருங்குறேன்டி நொருங்குறேன்டி கனவுக்குள்ள சிக்கிக்கிட்டு நொருங்குறேன்டி

ஏங்குறேன்டி ஏங்குறேன்டி தனிமையில புத்திக்கெட்டு ஏங்குறேன்டி

ஆத்தாடி ஆத்தாடி காத்தாடி ஆனேன்டி

உன்னை தேடி தேடி திசைமாறி போனேன்டி

ஆத்தாடி ஆத்தாடி காத்தோடுப்போனேன்டி

ஊஞ்சலாடி ஊஞ்சலாடி உனைதேடி வந்தேன்டி

காதலாகி காற்றில் ஆடி மிதிக்கிறேன் வாயேன்டி

ஆடி ஆடி தேடி தேடி தவிக்கிறேன் வாயேன்டி

தரையில் வந்தால் ஏந்திக்கொள்ளடி அடி அடி அடி

ஆத்தாடி ஆத்தாடி எனக்கென பிறந்தவள் நீ தான்டி

ஆத்தாடி ஆத்தாடி உனக்கென பிறந்தவன் நான் தான்டி

ஆத்தாடி ஆத்தாடி எங்கிருந்து எனக்கென வந்தேடி

ஆத்தாடி ஆத்தாடி எனக்கென பிறந்தவள் நீ தான்டி

தினம் படுத்தும் கண்ணுல எங்கும்

பெண்ணே உன் முகம் தோன்றுதடி

மயங்குறேன்டி மயங்குறேன்டி மனசுக்குள்ள நீ மனசுக்குள்ள

தினம் படுத்தும் கண்ணுல எங்கும்

பெண்ணே உன் முகம் தோன்றுதடி

தினம் நடக்கையில் என் நிழல்

உந்தன் பின்னால் தானே ஓடுதடி

விரும்புறேன்டி விரும்புறேன்டி உன்னால் என்னை விரும்புறேன்டி

திரும்புறேன்டி திரும்புறேன்டி உந்தன் வழி திரும்புறேன்டி

துடிக்கிறேன்டி துடிக்கிறேன்டி மனசுக்குள்ள நீயே நீயே நீ

ஆத்தாடி ஆத்தாடி எங்கிருந்து எனக்கென வந்தேடி

ஆத்தாடி ஆத்தாடி எனக்கென பிறந்தவள் நீ தான்டி

ஆத்தாடி ஆத்தாடி காத்தாடி ஆனேன்டி

ஆத்தாடி மனசுகுள்ள தயக்கம் ஏனடி

கொஞ்சம் கண்களால் பாரடி

சம்மதம் சொல்லடி

ஆத்தாடி ஆத்தாடி காத்தோடுப்போனேன்டி

ஊஞ்சலாடி ஊஞ்சலாடி உனைதேடி வந்தேன்டி

காதலாகி காற்றில் ஆடி மிதிக்கிறேன் வாயேன்டி

ஆடி ஆடி தேடி தேடி தவிக்கிறேன் வாயேன்டி

தரையில் வந்தால் ஏந்திக்கொள்ளடி அடி அடி அடி

ஆத்தாடி ஆத்தாடி உனக்கென பிறந்தவன் இவன் தான்டி

ஆத்தாடி ஆத்தாடி எங்கிருந்தோ உனக்கென வந்தான்டி



தெரியாமலே தொலைகிறேன்

உண்மை சுடுகிறதே

அறியாமலே சுவாசமே

காற்றில் கரைகிறதே

என்னை செதுக்கிய பெண்மை அறிகிறேன்

என்னை தழுவியே கடந்து போகும் இந்த பெண்மை....

காதல் புரிகிறதே ..



சந்திக்காத கண்களில் - 180


சந்திக்காத கண்களில்

இன்பங்கள்

செய்யப்போகிறேன்

சிந்திக்காது சிந்திடும்

கொண்டலாய்

பெய்யப்போகிறேன்

அன்பின் ஆலை ஆனாய்

ஏங்கும் ஏழை நானாய்

தண்ணீரைத் தேடும் மீனாய்


ஊகம் செய்தேனில்லை

மோகம் உன் மீதானேன்

கதைகள் கதைகள் கதைத்து

விட்டுப் போகாமல்?

விதைகள் விதைகள் விதைத்து

விட்டுப் போவோமே

திசையறியா பறவைகளாய்

நீ நான் நீள் வான்

வெளியிலே... பறக்கிறோம்

போகும் நம் தூரங்கள்

நீளம் தான் கூடாதா?

இணையும் முனையம் இதயம்

என்று ஆனாலே

பயனம் முடியும் பயமும்

விட்டுப் போகாதோ

முடிவறியா

அடிவானமாய்

ஏன் ஏன் நீநான்

தினந்தினம்

தொடர்கிறோம்?



திறந்தேன் திறந்தேன் நீ முட்டித் திறந்தேன்

என்னுள்ளே நீ வந்து தீ மூட்டத் திறந்தேன்

உறைந்தே உறங்கும் என் உள்ளச் சில்லெல்லாம்

ஒப்பிக்கும் உன் பேரை நீ கேட்கத் திறந்தேன்

தொலை தொலை என எனை

நானே கேட்டுக்கொண்டேனே

என் மமதையினை!

நுழை நுழை உனை என

நானே மாற்றிக்கொண்டேனே

என் சரிதையினை!

துளையேதும் இல்லாத தேன் கூடோ

நுழைவேதும் இல்லாத ஊன் காடோ

விளைவேதும் இல்லாத மாநாடோ

உன் இதயம் என நினைத்திருந்தேன் பொய்தானோ?

-----

முகத்திரை திருடினாய்

திரைக் கதைப்படி

அகத்தினை வருடினாய்

அதைக் கடைப்பிடி

பெண்ணே உன்னைத் துறவி என்றுதான்

இந்நாள் வரை குழம்பிப் போயினேன்

துறவறம்

துறக்கிறேன்

துளையேதும் இல்லாத தேன் கூடோ

நுழைவேதும் இல்லாத ஊன் காடோ

விளைவேதும் இல்லாத மாநாடோ

உன் இதயம் என நினைத்திருந்தேன் பொய்தானோ?

----

உரிமைகள் வழங்கினேன்

உடை வரை தொடு

மருங்குகள் மீறியே

மடை உடைத்திடு

ஓராயிரம் இரவில் சேர்த்ததை

ஓரீர் நொடி இரவல் கேட்கிறாய்!

பொறுமையின்

சிகரமே!

துளையேதும் இல்லாத தேன் கூடோ

நுழைவேதும் இல்லாத ஊன் காடோ

விளைவேதும் இல்லாத மாநாடோ

உன் இதயம் என நினைத்திருந்தேன் பொய் தானோ?


எனதுயிரே எனதுயிரே - பீமா


எனதுயிரே எனதுயிரே எனக்கெனவே நீ கிடைத்தாய்

எனதுறவே எனதுறவே எனதுறவே கடவுளைப்போல் நீ முளைத்தாய்

நெடுஞ்சாலையில் படும் பாதம்போல் சேர்கிறேன் வாழும் காலமே

வரும் நாட்களே தரும் பூக்களே நீளுமே காதல் காதல் வாசமே

இனி இரவே இல்லை கண்டேன் உன் விழிகளில் கிழக்கு திசை

இனி பிரிவே இல்லை அன்பே உன் உளறலும் எனக்கு இசை

உன்னை காணும் வரையில் எனது வாழ்க்கை வெள்ளை காகிதம்

கண்ணால் நீயும் அதிலே எழுதி போனாய் நல்ல ஓவியம்

சிறு பார்வையில் ஒரு வார்த்தையில் தோன்றுதே நூறு கோடி வானவில்

மரம் இருந்தால் அங்கே என்னை நான் நிழல் என விரித்திடுவேன்

இலை விழுந்தால் ஐயோ என்றே நான் இருதயம் துடித்திடுவேன்

இனிமேல் நமது இதழ்கள் இணைந்து சிரிக்கும் ஓசை கேட்குமே

நெடுநாள் நிலவும் நிலவின் களங்கம் துடைக்க கைகள் கோர்க்குமே

உருவாக்கினாய் அதிகாலையை ஆகவே நீ என் வாழ்வின் மோட்சமே


top