இறகை போலே அலைகிறேனே.................






திரைப்படம் : நான் மகான் அல்ல
இசை : யுவன் ஷங்கர் ராஜா
பாடகர்கள் : யுவன் ஷங்கர் ராஜா
பாடல் வரிகள் : யுகபாரதி


இறகை போலே,
அலைகிறேனே
உந்தன் பேச்சை கேட்கையிலே
குழந்தை போலே,
தவழ்கிறேனே
உந்தன் பார்வை தீண்டயிலே
தொலையாமல் தொலைந்தேனே
உன் கைகள் என்னை தொட்டதும்
கரையாமல் கரைந்தேனே
உன் மூச்சு கற்று பட்டதும்,
அநியாய காதல் வந்ததே,
அட காதல் ஆசை தந்ததே
எனக்குள்ளே எதோ
மின்னல் போலே தொட்டு சென்றதே

கண்ணோரம் காதல் வந்தால்
கண்ணீரும் தித்திப்பாகும்
வேறுஒன்றும் தேவையில்லை
நீ மட்டும் போதும் போதும்
என்னோடு நீயும் வந்தால்,
எல்லாமே கையில் சேரும்
வேறுஒன்றும் தேவையில்லை,
நீ மட்டும் போதும் போதும்

கூட வந்து நீ நிறபதும்,
கூடுவிட்டு நான் செல்வதும்
தொடருதே, தொடருதே நாடகம்
பாதி மட்டுமே சொல்வதும்,
மீதி நெஞ்சிலே என்பதும்
புரியுதே, புரியுதே காரணம்

நேரங்கள் தீருதே,
வேகங்கள் கூடுதே
பூவே உன் கண்ணுக்குள்ளே
பூமி பந்து சுத்துதே.

கண்ணோரம் காதல் வந்தால்
கண்ணீரும் தித்திப்பாகும்.

வேறு ஒன்றும் தேவையில்லை
நீ மட்டும் போதும் போதும்.

என்னோடு நீயும் வந்தால்,
எல்லாமே கையில் சேரும்
வேறுஒன்றும் தேவையில்லை,
நீ மட்டும் போதும் போதும்.

ஏய் என்னானதோ,
எதனதோ இல்லாமல்
போச்சே தூக்கமும்
கண்ணே உன்னை
காணமல் நான் இல்லை
என்மீதிலே உன் வாசனை
எப்போதும் வீச பார்கிறேன்
அன்பே உன்னை சேராமல் வாழ்வில்லை

நீ என்னை காண்பதே,
வானவில் போன்றதே
துரத்தில் உன்னை கண்டால்
தூறல் நெஞ்சில் சிந்துதே

கண்ணோரம் காதல் வந்தால்
கண்ணீரும் தித்திப்பாகும்

வேறுஒன்றும் தேவையில்லை
நீ மட்டும் போதும் போதும்
என்னோடு நீயும் வந்தால்,
எல்லாமே கையில் சேரும்
வேறுஒன்றும் தேவையில்லை,
நீ மட்டும் போதும் போதும்


கண் மூடி திறக்கும் போது



கண் மூடி திறக்கும் போது கடவுள் எதிரே வந்தது போல..
அடடா என் கண்முன்னாடி அவளே வந்து நின்றாளே..
குடையில்லா நேரம் பார்த்துக் கொட்டிப் போகும் மழையைப் போல..
அழகாலே என்னை நனைத்து இதுதான் காதல் என்றாளே..
தெருமுனையை தாண்டும் வரையும்..வெறும் நாள் தான் என்றிருந்தேன்..
தேவதையை பார்த்ததும் இன்று..திருநாள் என்கின்றேன்...
அழகான விபத்தில் இன்று ஹய்யோ நான் மாட்டிக்கொண்டேன்..
தப்பிக்க வழிகள் இருந்தும் ம் வேண்டாம் என்றேன்...

ஓஓஓஓஓஓ ஓஓஓஒஓஓஓ

உன் பெயரும் தெரியாதே உன் ஊரும் தெரியாதே..
அழகான பறவைக்கு பேர் வேண்டுமா..
நீ என்னைப் பார்க்காமல் நான் உன்னைப் பார்க்கின்றேன்..
நதியில் விழும் பிம்பத்தை நிலா அறியுமா..
உயிருக்குள் இன்னோர் உயிரை சுமக்கின்றேன் காதல் இதுவா..
இதயத்தில் மலையின் கனையை உணர்கின்றேன் காதல் இதுவா..
(கண் மூடி திறக்கும் )


வீதி உலா நீ வந்தால் தெரு விளக்கும் கண் அடிக்கும்...
வீடு செல்ல சூரியனும் அடம் பிடிக்குமே..
நதியோடு நீ குளித்தால் மீனுக்கும் காய்ச்சல் வரும்
உன்னை தொட்டுப் பார்க்கத்தான் மழை குதிக்குமே..
பூகம்பம் வந்தால் கூட ஓ ஓ பதறாத நெஞ்சம் எனது..
பூ ஒன்று மோதியதாலே ஓ ஓ பட்டென்று சரிந்தது இன்று..
(கண் மூடி திறக்கும்)

படம்: சச்சின்
இசை: தேவிஸ்ரீ பிரசாத்
பாடல் வரி: நா.முத்துகுமார்
பாடியவர்: தேவிஸ்ரீ பிரசாத்
top